×

ஜவ்வரிசி சேமியா பாயசம்

தேவையானவை:

ஜவ்வரிசி - கால் கப்
சேமியா - கால் கப்
சர்க்கரை - அரை கப் (உங்களின் இனிப்புக்கேற்ப)
பால் - அரை கப்
ஏலக்காய் - ஒன்று
அலங்கரிக்க :
நெய் - முந்திரி & திராட்சையை வறுக்குமளவு
முந்திரி - 5
திராட்சை - 5
குங்குமப்பூ - நான்கைந்து இதழ்கள்

செய்முறை :

வெறும் வாணலை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் ஜவ்வரிசியைப் போட்டு தீய்ந்துவிடாமல் வறுக்கவும். வறுக்கும்போதே நமக்குத்தெரியும் ஜவ்வரிசி உருண்டுருண்டு அளவில் கொஞ்சம் பெரிதாகும். வறுபட்டதும் இதைத் தனியாக எடுத்து வைக்கவும். அது முடிந்ததும் சேமியாவைப் போட்டு சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் ஜவ்வரிசியைக் கழுவி சேர்க்கவும். அது நன்றாகவெந்து வரும்போது சேமியாவை சேர்க்கவும். (இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் சேமியா முதலில் வெந்து குழைந்துவிடும்)

Tags :
× RELATED வெற்றி தரும் வெற்றிலை மாலை வழிபாடு!